நான் மேஜர் இல்லை, எனவே பிக்பாஸில் என்னை அனுமதிக்கமாட்டார்கள்.! பிகில் பாண்டியம்மா
நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மாவாக அறிமுகமானவர் தான் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் இந்திரஜா. ஆம் விஜய் அவரை குண்டம்மா என்று அழைத்து வெறியேத்தி விளையாட வைத்த காட்சியால் தான் ரசிகர்களை பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பிரேமம் என்ற மலையாள படத்தில் சாயபல்லவி ஆடிய நடனத்தை இந்திரஜா ஆடி சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பிரபலமானார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திரஜா ரசிகர்களுடன் பேசுகையில், ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என்று கேட்க, அதற்கு அவர் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியாக அமைந்தால் செல்லலாம், ஆனால் நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான போட்டியாளர்களை ஏற்கனவே செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.