ரசிகரின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.
இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய விருதைகளை பெற்றுள்ளார்.
தற்போது தமிழில், கோப்ரா, பொன்னியின் செல்வன், அயலான், வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் “நீங்கள் எப்போது ஹீரோவாக நடிப்பீர்கள்..?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ ஆர் ரஹ்மான் “நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா?” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…