ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்! காலா பட நடிகை அதிரடி!
- ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்.
- சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது, மேலும் பல திறமைகளும் இருக்க வேண்டும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காலா. இந்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஹூமா குரோஷி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் ரஜினி படத்தில் நடித்ததால், தனது உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய உணவுகள் இப்போது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பட வாய்ப்புக்காக வலைத்தளத்தில் நான் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். கவர்ச்சி படங்களை பார்த்து எப்படி பட வாய்ப்புகள் தருவார்கள். சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது, மேலும் பல திறமைகளும் இருக்க வேண்டும்.’ என கூறியுள்ளார்.