சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்(Hyundai) மோட்டார் இந்தியா ,அதன் மாடல்களில் ரூ .50,000 வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.அதன்படி,ஹூண்டாய் இந்தியா விற்பனை செய்யும் 11 மாடல்களில், சான்ட்ரோ, கிராண்ட் ஐ 10 நியோஸ், ஆரா மற்றும் புதிய ஐ 20 உள்ளிட்ட நான்கு மாடல் கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது,ஆரா மற்றும் கிராண்ட் ஐ 10 நியோஸ் இரண்டிலும், ஹூண்டாய் நிறுவனம் ரூ .50,000 தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி, ரூ. 35,000 வரை ரொக்க தள்ளுபடியையும், பரிவர்த்தனை போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன் முறையே ரூ .15,000 மற்றும் ரூ .5,000 பெறலாம்.இந்த தள்ளுபடி பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வகைகளுக்கும் பொருந்தும்.
அதேபோல,ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் ஹூண்டாய் ஐ 20 போன்ற அனைத்து பெட்ரோல் மாடல்களுக்கும்,ரூ .40,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகைகள் ஆகஸ்ட் 31, 2021 வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மாறாக,பிரபலமான ஹூண்டாய் எஸ்யூவி (SUV) களில் அல்லது அதன் பிரீமியம் செடான்கள் உள்ளிட்ட மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…