ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை!
ரஷ்யா ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய போது, உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளாலும் தடுக்க இயலாத Kinzhal ஏவுகணைகளை வடிவமைத்திருப்பதாக கூறினார். இந்த Kinzhal ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கூறியுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. Mig-31 ரக விமானத்திலிருந்து ஏவி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த ஏவுகணைகள் அழிக்கவல்லவையாகும். ரஷ்யாவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதின் தமது ஆளுமையை நிரூபிக்கும் நடவடிக்கையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.