அதிகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கொடுப்பதால் இறப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில், இதுவரை உலக அளவில், 5,517,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 346,949 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் பாதிப்பை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 96,000 நோயாளிகளிடம் இந்த பரிசோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதில், 15,000 நோயாளிகளுக்கு ஆண்டிபாடியுடன் , ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தையும் சேர்த்து கொடுத்தனர். ஆனால், அதிகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…