ரூ.4600 கோடிக்கு ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.! ஆர்டர் செய்த மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர்.!

Default Image
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல் முழுவதும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என கூறப்படுகிறது. 

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்து உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார். இந்நிலையில், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன்படி பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல் முழுவதும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என கூறப்படுகிறது.

ரூ.4600 கோடிக்கு ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.! ஆர்டர் செய்த மைக்ரோ சாப்ட் நிறுவனர்.!

மேலும், இந்த கப்பலில் பல அதிநவீன வசதிகள் உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதை சாண்டர் சினோட் (Sinot) டச்சு நிறுவனம் மற்றும் அவரது குழுவினரால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 3,750 நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் என்றும், இதன் நீளம் 112 மீட்டர் அளவில் இருக்கும் என்று தெரிவித்தனர். பின்னர் எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் திரவ ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என சினோட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருகிறோம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது. இதுதவிர முழுமையாக செயல்படும் திரவ ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களை செயல்படுத்துவதும் கூட எங்களுக்கு சவாலாக இருக்கும் என கூறியுள்ளது.

இந்த பிரமாண்டமான கப்பலில் 5 அடிக்கு தளங்கள் கொண்டது. இதில் 2 தளங்கள் வி.ஐ.பிக்கள் தங்கும் அறைகள், பிரபண்டமான காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை இந்த கப்பலில் உள்ளது. இதைத்தொடர்ந்து கப்பலில் உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம், ஹெலிபேட், சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் என பல அதிநவீன வசதிகளை பில்கேட்ஸின் இந்த புதிய சொகுசு கப்பல் கொண்டுள்ளது. மேலும் வட்ட வடிவமைப்பிலான படிக்கட்டுகள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பல்வேறு அம்சங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு சில காரணங்களால் இந்த சொகுசு கப்பல் 2024-க்கு முன்பு கடலுக்குச் செல்ல வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்