ஹஸ்க்வர்னாவுடன் கூட்டு சேர்ந்த பஜாஜ்… தனது புதிய மாடலை அறிமுகம் செய்தது…

ஸ்வீடன் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக தற்போது இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹஸ்க்வர்னாவின் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இரு மாடல்களிலும்
- 248.76சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு,
- சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர்,
- 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
- இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரு மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 1.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு கட்டணம் ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025