கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இந்நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அரி பென் எப்படி தற்கொலை செய்து கொண்டார்.?தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்பது என்ன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடவில்லை.அரி பென்னின் மறைவுக்கு நார்வே மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரி பென் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். அவரை பற்றிய இதமான மற்றும் நல்ல நினைவுகளை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…