பிலிப்பைன்ஸை தொடர்ந்து வியட்நாமை தாக்கும் மோலேவே புயல்.!
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மோலேவே புயலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் . நடப்பாண்டில் மட்டும் 17வது முறையாக புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் மோலேவே புயலில் சிக்கி காணாமல் போன 12 மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மோலேவே புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வியட்நாம் நோக்கி நகர்ந்து வருகிறது.எனவே வியட்நாமில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 150கிமீ வேகத்தில் வீசும் என்றும் ,இந்த மோலேவே புயல் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இந்த மோலேவே புயலால் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டு 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.