அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள் கண்டுபிடிப்பு.!

Default Image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில்  Bootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

இந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியதையடுத்து போலீஸார் ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட மேக்அப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிராண்ட் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்