விவாகரத்து பெற்ற ஹிருத்திக் ரோஷன் – சுசனே கான் தம்பதியை சேர்ந்து வைத்த கொரோனா
சுசேன கான் என்பவரை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2000- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிருத்திக் தனது இரண்டு மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுசன்னே தன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் மகன்கள் தனிமையை உணரக்கூடாது என்பதை உணர்ந்து சுசேன கான் வீட்டில் வசிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்க்கு நன்றியும் தெரிவித்துள்ளார் ஹிருத்திக் .