உலகளாவிய பயணத்திற்கான தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும் – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்
சர்வதேச நாடுகளுக்கிடையே பயணம் செய்ய தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் கடந்த வருடம் முதல் உலக நாடுகளுக்கு இடையே அனைத்து விமான பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் அதனை சரி செய்யும் விதமாகவும் மற்றும் மற்றொரு கோடைகாலத்தை இழப்பதைத் தவிர்க்கவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் விமானத் தொழில் நிறுவனங்கள், சில ஆசிய அரசுகள் ஆகியவை ஒன்றினைந்து கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க, புதிய செல்போன் செயலிகளை உருவாக்கும் அமைப்புகளில் ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தற்போது பணியாற்றி வருகின்றன.
மேலும் இந்த நாடுகள் எல்லை தாண்டிய பயணங்களுக்கு தங்களது சொந்த டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணியில் தற்போது பணியாற்றி வருகின்றன.இது வெளிநாடுகளில் விமான பயணிகளின் கடுமையான தனிமைப்படுத்துதலை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்களால் விற்கப்படும் ஃபோனி பேப்பர் கொரோனா ஆவணங்கள் தொற்றுநோய்களின் போது ஒரு சிக்கலாக இருந்தன, ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் டிஜிட்டல் பதிப்புகள் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளன எனவும் அவைகள் போலியைத் தவிர்த்து நாடுகளுக்கிடையேயான தொற்று பாதிப்பை குறைக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து Common Pass தலைமை நிர்வாக அதிகாரி பால் மேயர் உலகில் கொரோனா தொற்றநோயின் காரணமாக நாடுகளுக்கிடையேயான விமான பயணம் குறைந்த நிலையில், தடுப்பூசி பாஸ்போர்ட்கள் சர்வேதச பயணத்திற்கான முக்கியத் தேவையாக இருக்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளார்.