குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி?
குளிர்காலம் அல்லது பனிக்காலம் ஆரம்பித்து விட்டாலே நம்மில் பலர் சருமம் குறித்த கவலை கொள்ள ஆரம்பித்துவிடுவர். இந்த கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.., காற்றின் ஈரப்பதம் அதிகரித்து, வீசும் தென்றல் காற்று சளிக்காற்றாக மாறி உடலை நடுநடுங்கச் செய்யும் பொழுது, நம் மனங்களில் இந்த கவலை முளை விடத் தொடங்குகிறது.
நம்மில் பெரும்பாலானோர் குளிர்காலங்களில், சருமம் வறண்டு போதல், தோலில் விரிசல்கள் உண்டாதல், பனிப்பத்து போன்ற வெண்ணிற தழும்புகள் போன்ற சரும பாதிப்புகளால் பாடுபடுவதுண்டு; இன்னும் சிலருக்கு சரும நிறம் மாறுபாடடைந்து, சருமத்தில் கருமை நிறம் படர்வதுண்டு. இது போன்ற பிரச்சனைகளை வீட்டிலேயே செய்யப்படும் ஒரு எளிய முறை மூலமாக எப்படி எதிர்கொள்வது என்று இங்கு படிக்கலாம்.
தேங்காய்ப்பால் முறை
ஒரு நல்ல பதத்தில் உள்ள தேங்காயை எடுத்துக் கொண்டு, அதில் இருந்து தேங்காய்ப்பாலை எடுக்கவும். இவ்வாறு எடுக்கப்படும் தேங்காய்ப்பாலில் நீர் கலக்காமல், எடுப்பது நல்ல பலன்களை விரைவில் கொடுக்கும்.
எடுக்கப்பட்ட தேங்காய்ப்பாலை முகம் மற்றும் உடல் பாகங்கள் என சரும பிரச்சனைகள் இருக்கும் இடங்களில் தடவி, நன்றாக மசாஜ் செய்யவும்.
பயன்கள்
இது போன்று சருமத்தில், முகத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, சருமத்தில் தடவப்பட்ட தேங்காய்ப்பால், மசாஜ் மூலமாக தோலின் அனைத்து பாகங்களையும் அடைந்து அங்கு காணப்படும் இறந்த செல்களை நீக்கி, செல்களின் புத்தாக்கத்தை தூண்ட உதவுகிறது.
எத்தனை நாள்?
இந்த செய்முறையை 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், சரும பிரச்சனைகள் உடனடியாக சீராவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். இது எளிதில் செய்ய உகந்த முறை; மேலும் செலவு ஏதும் இல்லாத முறை. எந்த வயதினருக்கும், எந்த பாலினருக்கும் பொருந்தும் ஒரு சிறந்த முறையாகும்..! விருப்பமிருந்தால் முயற்சித்து பாருங்கள்..!