கண்களுக்கு கீழ கருவளையமா? இந்த ரெண்டு பொருள் போதும் அதை நீக்க..!

Default Image

பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

தூக்கமின்மை, அதிக நேரம் கணினி, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி கசக்குவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவைகளே முக்கியமான காரணங்கள். இதனை எளிமையாக வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே நீக்கி விடலாம்.

டிப்ஸ்-1: முதலில் ஒரு ஐஸ்கட்டியை எடுத்து கொண்டு அதனை மென்மையாக கண்களில் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

டிப்ஸ்-2: கிரீன் டீ பேக் இருந்தால் அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து கண்களுக்கு மேலே 10 நிமிடங்கள் வைக்கலாம்.

டிப்ஸ்-3: புதினா அழகை பராமரிக்க முக்கியமான ஒன்று. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் புதினா இலைகளை அரைத்து அந்த சாறை கருவளையத்தின் மீது 10 நிமிடம் வைக்கலாம்.

டிப்ஸ்-4: காய்ச்சாத பால் இருந்தால் அதில் 1 டீஸ்பூன், பன்னீரில் 2 டீஸ்பூன் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டன் பஞ்சை வைத்து ஊற வைக்கவும். பின்னர் இந்த பஞ்சுகளை 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைத்தால் போதும்.

டிப்ஸ்-5: ஒரு தக்காளியை பிழிந்து நன்கு சாறு எடுத்து கொள்ளுங்கள், அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருவளையத்தில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து காய்ந்த பின்னர் எடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இந்த முறைகளில் உங்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அதை செய்து கண்களை நல்ல பொலிவோடு வைத்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்