ஜியோ சிம்மில் பழைய விலையில் ரிசார்ஜ் செய்வது எப்படி?
- முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.
- செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ வாடிக்கையாளர்கள், தங்களது பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். அப்படி செய்யவேண்டுமானால், வாடிக்கையாளர்கள் எவ்வித சலுகையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
புதிய டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர், பழையை சலுகைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது.