முகத்தில் எண்ணெய் பிசுக்கு வராமல் தடுக்கலாமா.?
முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை சரிசெய்யும் வழிமுறைகள் :
இன்றும் பலருக்கு வெளியே சென்று வரும் போது முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படும்.இவ்வாறு எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படுவதால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதனால் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
- தக்காளி சாற்றுடன் சம அளவு தேனை எடுத்து கொண்டு நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை நீங்கி முகம் புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும்.
- கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும் தோற்றம் பெரும்.
- புதினா இலையை நீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குளிர வைத்து பின்னர் காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தை துடைத்தால் எண்ணெய் பற்றை தடுத்து நிறுத்தும்.
- நீரில் சம அளவு வினிகரை சேர்த்து அதில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.