காலை உணவுக்கேற்ற காய்கறி ஊத்தப்பம் செய்வது எப்படி…?
காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இட்லி, தோசைகளை சாப்பிடாமல் எதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று நாம் ஆரோக்கியமான, சுவையான காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- வெங்காயம்
- குடை மிளகாய்
- கேரட்
- பச்சை மிளகாய்
- கொத்தமல்லி
- தக்காளி
செய்முறை
காய்கறி கலவை : முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக கிளறி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஊத்தப்பம் : அதன் பின்பு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, அதன் மேல் தோசை மாவை ஊற்றி பின் நாம் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை எடுத்து தோசை மீது தூவவும். பின், இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுத்து கொள்ளவும்.
அவ்வளவுதான் அட்டகாசமான ஊத்தப்பம் தயார். இதை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள்.