நாவை சுண்டி இழுக்கும்..நெல்லிக்காய் ஊறுகாய் .!
நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போமா.?
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 15
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அனைத்து நெல்லிக்காயையும் போட்டு கூட மஞ்சள் தூள், தேவையான உப்பு ஆகியவற்றையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர், அதை அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்த சிறு துண்டுகளாக வெட்டி நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளின் மீது உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அதே, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் மிக்ஸ் செய்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நல்லா கிளறி இறக்கி வைத்த பின் சூப்பரான நாவை சுண்டி இழுக்கும் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.