சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி..?
சுவையான சிக்கன் 65 உங்களது வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கறி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தயிர்
எலும்பிச்சை சாறு
சிக்கன் 65 மசாலா
முட்டை
முதலில் சிக்கனில் தேவையான அளவிற்கு, தயிர் சேர்க்கவும், அடுத்ததாக அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும், அதன் பிறகு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறை சேர்க்கவும் அடுத்ததாக முட்டையை மற்றும் சிக்கன் 65 மசாலாவையும் நன்றாக கையை வைத்து மசாலா கறியுடன் சேரும் வரை பிசையவும் பின் ஒரு 30 நிமிடம் வெயிலில் ஊறவைக்கவும்.
அடுத்ததாக ஒரு குடுவையில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதிக்கும் வரை காய வைக்கவும், பின் நம் ஊறவைத்த சிக்கனை அதற்குள் போட்டு நன்றாக பொரியவிட்டு வேகவிடவும், பின் சுவையான சிக்கன் 65 ரெடி அதன் பிறகு பெரிய வெங்காயம் வெட்டி வைத்து சாப்பிட்டீர்கள் என்றால் அதனுடைய சுவை மிகவும் அருமையாக இருக்கும்.