சுவையான வாழைப்பழ ஹெம்ப் ஸ்மூதி செய்வது எப்படி ?
- சுவையான வாழைப்பழ ஹெம்ப் ஸ்மூதி செய்வது எப்படி ?
நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த வாழைப்பழத்தில் நாம் பல வகையான உணவு பொருட்கள் செய்யலாம்.
தற்போது, சுவையான வாழைப்பழ ஹெம்ப் ஸ்மூதி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பால் – 1 கப்
- வாழைப்பழம் – 2
- ஹெம்ப் விதைகள் – 2 தேக்கரண்டி
- பட்டை பொடி – ஒரு சிட்டிகை
- தேன் – தேவைக்கு ஏற்ப
- பீனட் பட்டர் – 1 தேக்கரண்டி
- சியா விதைகள் – 1 தேக்கரண்டி
செய்முறை
பால், வாழைப்பழம், ஹெம்ப் விதைகள், பட்டை பொடி மற்றும் தேனை ஒரு பிளெண்டரில் சேர்த்து விழுதாக அறைக்க வேண்டும். அறைத்த விழுதை ஒரு செர்விங் கிளாஸில் ஊற்ற வேண்டும்.
இதன்மேல் பீனட் பட்டர் மற்றும் சியா விதைகளை தூவி அலங்கரிக்க வேண்டும் . சுவையான வாழைப்பழ ஹெம்ப் ஸ்மூதி தயார்.