இந்த தீபாவளிக்கு இனிப்பான சூப்பர் ஜாங்கிரி எப்படி செய்வது? வாருங்கள் பார்க்கலாம்!

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- உளுந்து
- சர்க்கரை
- ஏலக்காய்த்தூள்
- ஃபுட் கலர்
- அரிசிமாவு
- எண்ணெய்
ஜாங்கிரி செய்முறை
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து எடுத்து அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். அதன் பின் வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் கவர் போன்றவற்றை எடுத்து அதில் ஓட்டை போட்டு மாவு கலவையை அதில் ஊற்றி இருக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு தீயில் வைத்துக் கொண்டு எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஃபுட் கலர் கலந்த மாவை வட்டமாக பிழிந்து அதன் பின் ஜாங்கிரி போல மேல்புறம் சிறுசிறு வட்டங்களாக பிழிந்து விடவும். அதிக தீயில் வைக்காமல் இரு பக்கமும் சமமாக வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய் தூள் தூவி பொரித்தெடுத்த ஜாங்கிரி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து இறக்கினால் அட்டகாசமான ஜாங்கிரி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025