மனம் கமழும் கொத்தமல்லி நூடில்ஸ் சூப் செய்வது எப்படி
கொத்தமல்லியை நாம் சமையலில் வெறும் மணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்து வருகிறோம். ஆனால் அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் இது நமது உணவில் மிக சிறந்த செரிமான பொருளாக இது விளக்குகிறது.
- கொத்தமல்லி நூடில்ஸ் சூப் செய்வது எப்படி?
கொத்தமல்லி மிக சிறந்த வாசனை பொருள் மட்டுமல்ல நமது உடலில் ஏற்படும் பல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.மணம்கமழும் கொத்தமல்லிசூப் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி சாறு -1/2 கப்
நூடில்ஸ் -1/4கப்
எண்ணெய்-தேவையான அளவு
பீன்ஸ்-2
கேரட் -1
ஸ்வீட் சோளம் -2 ஸ்பூன்
சீரகத்தூள்-1ஸ்பூன்
மிளகு தூள் -1ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
முதலில் நூடில்ஸை தனியாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேகவைத்த நூடில்ஸை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.பின்பு அதனை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீன்ஸ், கேரட், ஸ்வீட் சோளம் ,வெங்காயம் ஆகிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
காய்கள் வெந்ததும் வேகவைத்த நூடல்ஸ், கொத்தமல்லி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு சீரக தூள், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை பழசாறு சேர்த்து பரிமாறவும். இப்போது சூடான கொத்தமல்லி நூடில்ஸ் சூப் ரெடி.