அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?
வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்தாலே சுவையாக தான் இருக்கும். ஆனால் சிலருக்கு முறையாக வைக்க தெரியாது. இன்று நாம் எப்படி அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழப்பு வைப்பது என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- மல்லி
- கடலைப்பருப்பு
- துவரம் பருப்பு
- வெண்டைக்காய்
- தேங்காய் துருவல்
- மிளகு
- பச்சை மிளகாய்
- சீரகம்
- இஞ்சி
- மஞ்சள் தூள்
- தயிர்
- சின்ன வெங்காயம்
- எண்ணெய்
- வரமிளகாய்
செய்முறை
முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மல்லி ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் சேர்த்து நன்றாக தண்ணீரில் அலசி விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின்னதாக ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 5 நிமிடம் வதங்கியதும் அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின் மிக்ஸியில் அரைக்க தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய், சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் ஏற்கனவே ஊற வைத்துள்ள பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பதாக அவற்றுடன் மஞ்சள்தூள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் போட்டு மீண்டும் ஒரு முறை அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதன்பின் கெட்டியான தயிரை எடுத்துக் கொண்டு நாம் அரைத்து வைத்துள்ள இந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும். பின் அடுப்பை பற்றவைத்து ஒரு சட்டியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, கடுகு பொரிந்ததும் வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும்.
அதன் பின்பாக நாம் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அப்படியே ஊற்றி விட்டு லேசாக போங்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் கலந்து இறக்கி விட வேண்டும். அதிக அளவு தீயில் வைத்தால் தயிர் திரிந்து விடும். மிதமான தீயில் வைத்து பொங்க விட்டு எடுத்தால் அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு வீட்டிலேயே தயார்.