அட்டகாசமான மீன் பூண்டு மசாலா செய்வது எப்படி…?

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி
- புளிக்கரைசல்
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- உப்பு
- கருவேப்பிலை
- சோம்பு
- மிளகு
செய்முறை
முதலில் கடாயில் மிளகு, மல்லி, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை, ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும். பூண்டு அதிகளவில் சேர்க்க வேண்டும், அரைத்தும் சேர்க்கலாம். அதன் பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.
பின் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயில் பால் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் மீனை போட்டு நன்றாக கிளறி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான மீன் பூண்டு மசாலா தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025