வீட்டிலேயே ஈஸியாக இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாம்!
மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- இட்லி மாவு
- அரிசி மாவு
- பச்சை மிளகாய்
- வெங்காயம்
- தேங்காய்
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அதில் அரிசி மாவு மற்றும் துருவிய தேங்காய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு 5 நிமிடம் ஊறவிடவும்.
அதன்பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள இட்லி மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அட்டகாசமான இட்லி மாவு போண்டா வீட்டிலேயே தயார்.