சத்தான கோதுமை ரவை கஞ்சி செய்வது எப்படி ….? வாருங்கள் அறியலாம்!
காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை சாப்பிடுவதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான கஞ்சிகள் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து எப்படி சத்துள்ள சுவையான கஞ்சி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை
- தேங்காய் பால்
- பச்சை மிளகாய்
- தண்ணீர்
- உப்பு
- பீன்ஸ்
- பட்டாணி
- கேரட்
செய்முறை
வறுக்க : ஒரு கடாயில் கோதுமை ரவையை நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்
அவிக்க : ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
கஞ்சி : பாதியளவு வெந்ததும் அதில் தேங்காய் பால் மற்றும் வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை சேர்த்து நன்கு அவிய விடவும். வெந்ததும் கொத்த மல்லி தழையை தூவி இறக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான கோதுமை ரவை காஞ்சி தயார்.