தேவையான பொருட்கள்: இட்லி-6, எண்ணெய்-4 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இடித்த பூண்டு – 6 பல், வறமிளகாய்-2, பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை – 2 கொத்து, நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, தனியாத்தூள் – 3/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, டொமேட்டோ கெட்சப் – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: முதலில், வேக வைத்த இட்லிகளை ஆறிய பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, சோம்பு, இடித்த பூண்டு, வறமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கருவேப்பிலை சேர்த்து பூண்டு லேசாக பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை சென்ற பிறகு இதனுடன் தக்காளி பழம் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்குங்கள். வதக்கிய பின்னர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் எல்லா மசாலாப் பொருட்களையும் கலந்து விட வேண்டும். இதில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் நன்கு வேக விடுங்கள். பின்னர் இதில் டொமேட்டோ கெட்சப் இருந்தால் அதனை சேர்த்து மசாலா பொருட்களோடு கலந்து விடுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்துள்ள நறுக்கிய இட்லிகளை கடாயில் உள்ள மசாலாவில் சேர்க்க வேண்டும். இதன் பிறகு அடுப்பை முழு தீயில் வைத்து 2 நிமிடம் நன்கு இட்லிகளை பிரட்டி எடுத்து அடுப்பை அணைத்து விடலாம். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி சுடசுட சுவையான மசாலா இட்லி ருசித்து பாருங்கள்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…