மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி ?
- மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி ?
கோடைகாலம் வந்தாலே நமக்கு மாம்பழம் தன நியாபகம் வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாம்பழம் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த மாம்பலய்ஹில் நாம் பல வகையான உணவு செய்யலாம். இன்று நாம் மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஸ்டிக்கி ரைஸ் – 120 கிராம்
- தேங்காய் பால் – 100 மிலி
- சர்க்கரை – 15 கிராம்
- மாம்பழ கியூப்கள் – 50 கிராம்
- புதினா இலைகள் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஸ்டிக்கி ரைஸை தேங்காய் பாலில் வேக வைக்க வேண்டும். அதன்பின் சமைத்த சாதத்தை நன்கு ஆற விட வேண்டும். மாம்பழங்களை துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் வெட்டிய மாம்பழங்களை ஒரு அழகான கோப்பையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சமைத்த ஸ்டிக்கி ரைஸை வெட்டி வைத்துள்ள மாம்பழ துண்டுகளுடன் சேர்த்து போட வேண்டும். பின் புதினா இலைகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.