குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள்.
இதனால், அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வெங்காயம் – 2 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1 கப்
துருவிய சீஸ் – 1/2 கப்
மிளகுத் தூள் – 1/4டீஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
மைதா – 2 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் பிரேட் துண்டுகளை வெண்ணெய் தடவி ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கவும். பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி மேலும் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர், அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பின் அதில் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சீஸ் சேர்த்து உருக வைக்கவும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும். இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால் கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி…..
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…