வீட்டிலேயே ஆரோக்கியமான மூலிகை டீ தயாரிப்பது எப்படி?
மழை நேரத்தில் அல்லது காலையில் எழுந்ததும் சூடாக டீ குடிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தோனும். ஆனால் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நமது உடலில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல் ஆகியவற்றை நீக்க இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றை வைத்து எவ்வாறு மூலிகையை வைத்து எப்படி செய்வது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி
- எலுமிச்சை சாறு
- தேன்
- தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சியை தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இஞ்சி நன்றாக கொதித்ததும் அந்த தண்ணீரை தனியாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் மட்டும் மூடி வைத்துவிட்டு, பின் எடுத்து குடித்தால் அட்டகாசமான மூலிகை டீ வீட்டிலேயே தயார். ஜலதோஷம் மற்றும் இருமல் ஏற்படக்கூடிய நேரங்களில் இதுபோன்று டீ வைத்து குடிததால் உடலுக்கு மிக ஆரோக்கியமாக இருக்கும்.