மணமணக்கும் சுவையில் காளான் கிரேவி எப்படி செய்வது
காளான் நமது உடலுக்கு தேவையான அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கும் பிடித்த உணவாகும்.
மணமணக்கும் காளான் கிரேவி எப்படி செய்வது ?
மணமணக்கும் காளான் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் – 1 பாக்கெட்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி -சிறிதளவு
அரைக்க :
வெங்காயம் – 1
தக்காளி – 2
பட்டை – 1 துண்டு
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை இறக்கி குளிர வைத்து, மிப்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டூ பேஸ்ட் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா,மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு பச்சை வாசனைபோனவுடன் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.இப்போது சூடான சுவையான காளான் கிரேவி ரெடி.