ஐந்து நிமிடத்தில் அருமையான கருவேப்பில்லை சாதம் செய்வது எப்படி?
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அட்டகாசமான முறையில் கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை
- கடுகு
- எண்ணெய்
- உளுந்து
- கடலைப்பருப்பு
- வறுத்த வேர்கடலை
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- பெருங்காயம்
- புளிக்கரைசல்
செய்முறை
முதலில் கருவேப்பிலை ஒரு கொத்து எடுத்து நன்றாக அலசி அவற்றை மேல் இலேசாக உலர வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக இந்த கருவேப்பிலையை மிக்ஸியில் போட்டு பொடி போல அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் அடுப்பில் எண்ணெயை ஊற்றி தேவையான அளவு கடுகு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை தூளையும் சேர்த்து அதன் பச்சை வாசனை நீங் வதக்கவும்.
பின் வறுத்த வேர்கடலை மற்றும் சிறிது சிறிதாக கீறிய பச்சை மிளகாயை ஆகியவை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கடைசி நேரத்தில் புளிக்கரைசல் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு பின் ஆகியவற்றுடன் சாதம் சேர்த்துக் கிளறினால் அட்டகாசமான கருவேப்பிலை சாதம் தயார். இவற்றுடன் உருளைக்கிழங்கு அல்லது கத்தரிக்காய் கூட்டு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.