முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டை, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் முட்டை, பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதேபோல ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
வேக வைத்தல் : முட்டை, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை எண்ணெய் தடவிய ஒரு தட்டில் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
பொரியல் : அதன் பின்பு வெட்டி வைத்துள்ள முட்டைகளை முதலில் முட்டை கலவையில் தோய்த்து, அதன் பின்பு மைதா மாவு கலவையில் பிரட்டி, பின் மீண்டும் முட்டை கலவையில் தோய்த்து, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் அட்டகாசமான எக் பிங்கர்ஸ் தயார்.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…