தினமும் காலையில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். காலையிலேயே இட்லி செய்து சாப்பிடுவது தென் இந்தியர்களின் வழக்கமான உணவாக மாறிவிட்டது. இந்த இட்லியை எப்படி வித்தியாசமான முறையில், அட்டகாசமான சுவையில் தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ரவை மாவு : ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ரவை எடுத்துக் கொண்டு அதனுடன் தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சீரகம், மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
மாவு கலவை : தாளித்த பொருட்கள் அனைத்தையும் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்பு இட்லி தட்டில்இட்லி மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ரவா இட்லி வீட்டிலேயே தயார். நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள், அடிக்கடி செய்வீர்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…