சுவையான பரங்கிக்காய் சுண்டல் செய்வது எப்படி ?
- பரங்கிக்காய் சுண்டல் செய்வது எப்படி?
நமது அன்றாட வாழ்வில் காய்கறி ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. நமது அனைத்து சமையல்களிலும் காய்கறி இல்லாமல் இருக்காது. இவை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
தற்போது பரங்கிக்காய் சுண்டல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
- பரங்கிக்காய் – ஒரு துண்டு
- வெங்காயம் – ஒன்று
- பூண்டு – 4 பல்
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி – சிறு துண்டு
- துவரம் பருப்பு – கால் கப்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
வெங்காயம் மற்றும் பரங்கிக்காயை நறுக்கி வைக்க வேண்டும். துவரம் பருப்பை ஊற வைக்க வேண்டும். குக்கரில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து நீர் விட்டு வேக விட வேண்டும்.
ஊற வைத்த பருப்பை இஞ்சி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். பாதி வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வேக வைத்து இறக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன்பின், தாளித்தவற்றை வேக வைத்த பருப்பில் சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்க வேண்டும். சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.