10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

Published by
Rebekal

வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கரம் மசாலா
  • கடலை மாவு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு தண்ணீரோடு இருக்கும் பொழுது வடை மொறுமொறுப்பாக இருக்காது. அடுத்ததாக பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உருளைக்கிழங்கையும் அதோடு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கருவேப்பிலை கொத்தமல்லி தழை மற்றும் வடைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் கடலை மாவு சேர்த்தால் நன்கு ஒட்டிய பதத்திற்கு வரும், தேவைப்பட்டால் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின் இவற்றை உருண்டையாக பிடித்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு என்ற உருளைக்கிழங்கு வடை தயார்.

Published by
Rebekal

Recent Posts

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

12 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

31 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

35 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

1 hour ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

4 hours ago