பூரிக்கு சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
பூரி என்பது பொதுவாக தமிழகத்தில் நாம் வழக்கமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருள் இதற்கான குருமாவை செய்வது எப்படி என்று என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- உருளைக்கிழங்கு
- மஞ்சள்பொடி
- மிளகுத்தூள்
- வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- கடலை மாவு
- கடலைப்பருப்பு
- கொண்டைக்கடலை
செய்முறை
முதலில் உருளை கிழங்கை அவித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுள் போட்டு லேசாக எண்ணெயில் படுமாறு வதக்கவும். அதன்பின்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அதனுடன் அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
கடலை மாவை நன்றாக நீரில் கரைத்து உள்ளே ஊற்றி கிளறவும். லேசாக கொதித்து கெட்டியாக வரும்போது, வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பை தூவி இறக்கினால் அட்டகாசமான பூரி குருமா தயார்.