சுவையான நூடில்ஸ் வீட்டில் செய்வது எப்படி?
பொதுவாக தெரு ஓரங்களில் விற்கப்படும் நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணி போன்றவை நாம் விரும்பி வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு பொருள். ஆனால், அவற்றை வீட்டில் நாம் செய்தால் சுவையாக இருக்காது. நாம் விரும்பக்கூடிய அளவு சுவையோ அல்லது கடையில் கிடைக்கக் கூடிய அளவு சுவை கிடைக்காது. அந்தளவு சுவையில் எப்படி வீட்டில் சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பொரித்த இறைச்சி
- வெங்காயம்
- தக்காளி
- பீன்ஸ்
- கேரட்
- முட்டை
- உப்பு
- எண்ணெய்
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
- கரம் மசாலாத்தூள்
- மிளகாய் தூள்
- அவித்த நூடில்ஸ்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய பின்பு பீன்ஸ் கேரட் ஆகியவற்றை போட்டு வதக்கவும். லேசாக உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதன் பின்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பொடியின் மனம் லேசாக வதங்கியவுடன் அவித்து வைத்துள்ள நூடுல்ஸை உள்ளே போட்டு நன்றாக கிளறவும்.
அதன் பின்பு பொரித்து வைத்துள்ள இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதன் மீது தூவி லேசாக கிளறி விடவும். 5 நிமிடம் அதை வைத்து விட்டு அதன் பின்பு எடுத்து சாப்பிட்டால் இறைச்சியின் சுவை சேர்ந்து அட்டகாசமான ருசியை தரும். தேவைப்படுபவர்கள் முட்டையை மிளகுப் பொடியுடன் வரட்டி அதையும் தூவி சேர்த்துக் கொள்ளலாம்.