சுவையான மாங்காய் சோறு செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!
பொதுவாக மாங்காய் அதிகமான புளிப்பு தன்மை கொண்டது. இதன் பழத்தைசாதாரணமாகவும், ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் மாங்காயை நாம் அப்படியே தான் சாப்பிடுவோம். அதே மாங்காயை எப்படி சோறுடன் சேர்த்து சமைத்து உண்பது என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.
தேவையான பொருள்கள்
- மங்கை
- வெங்காயம்
- தக்காளி
- உப்பு
- மிளகாய்
- எண்ணெய்
- வெந்தயம்
செய்முறை
முதலில் கேரட் துருவும் கம்பியில் வைத்து மாங்காயை தேங்காய் துருவல் போல துருவிக்கொள்ளவும். அதன் பின்பு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பின்பு துருவி வைத்துள்ள மாங்காயை அதனுடன் சேர்ந்து சற்று உப்பு போட்டு கிளறவும். அதன் பின்பு அந்த கலவையில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்தால் சுவையான மாங்காய் சாதம் தயார்.