சுவையான மாம்பழ ரெசிபி செய்வது எப்படி ?
- சுவையான மாம்பழ ரெசிபிசெய்வதுஎப்படி?
நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மாம்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு பழம் தான். இந்த பழத்தில் நாம் பல வகையான உணவு பொருட்களையும் செய்யலாம்.
இப்பொது மாம்பழத்தில் சுவையான பலகாரம் செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையானவை
- மாம்பழம் – 1 அல்ஃபோன்சோ
- சர்க்கரை – 300 கிராம்
- குங்குமப்பூ – 1 கிராம்
- தண்ணீர் – 250 மி.லி
- பால் – 250 மி.லி
- தயிர் – 100 கிராம்
- மைதா – 200 கிராம்
- நெய் – 500 கிராம்
செய்முறை
ஈர மாவை உருவாக்க, மைதாவையும் தயிரையும் ஒரு நாள் முன்னதாகவே கலந்து வைக்க வேண்டும். சர்க்கரையை தண்ணீர் சேர்த்து உருக்கி, அதிலிருந்து சிரப்பை உருவாக்க வேண்டும், அதில் பாலை சேர்த்து கலக்கவும். மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயைச் சூடாக்கி, அதில் நெய்யை முதலில் சூடாக்க வேண்டும். மாம்பழ துண்டுகளை ஈரமாவில் தோய்த்தெடுத்து சூடாகி இருக்கும் நெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். பொரித்தவுடன், அதை எடுத்து சர்க்கரை சிரப்பில் ஊறவிட வேண்டும். இப்பொது சுவையான மாம்பழம் ரெசிபி தயார்.