வெயிலுக்கு குளிர்ச்சி அளிக்கும் சுவையான வெந்தய பணியாரம் செய்வது எப்படி ?
- சுவையான வெந்தய பணியாரம் செய்வது எப்படி?
கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், மக்கள் அதிகமாக உடலுக்கு குளிச்சி அளிக்கக் கூடிய உணவு வகைகளை தான் விரும்பி உண்பது உண்டு. அந்த வகையில், வெந்தய பணியாரம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சுவையாகவும் இருக்கும்.
தற்போது, சுவையான வெந்தய பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நெய் – 2 தேக்கரண்டி
- தேங்காய்த் துருவல் – 10 தேக்கரண்டி
- சோடா உப்பு – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- பச்சரிசி – 200 கிராம்
- உளுந்து – 6 தேக்கரண்டி
- வெந்தயம் – ஒன்றரை தேக்கரண்டி
- வெல்லம் – 200 கிராம்
- ஏலக்காய் – 2
செய்முறை
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ள வேண்டும. அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்ட வேண்டும்.
ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக மிக்சியில் அரைக்க வேண்டும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிட வேண்டும்.
அதன்பின் பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்க வேண்டும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெந்தய பணியாரம் தயார்.