சுவையான ஆட்டு குடல் குழம்பு வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆட்டுக்கறி என்றாலே விரும்பி உண்பவர்கள் தற்போது அதிகம் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டு கறி மற்றும் குடல்களை எவ்வாறு சமைப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. வீட்டிலேயே சுவையான ஆட்டு குடல் எப்படி சமைப்பது என்பது பற்றி இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுகுடல்
- மல்லி 2 தேக்கரண்டி
- வெங்காயம்
- உப்பு
- மிளகாய் வற்றல்
- சீரகம்
- இஞ்சி
- நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் மூன்று கப் நீர் சேர்த்து இஞ்சி போட்டு குடலை 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். பின்பு வத்தல் சீரகம் மல்லி ஆகியவற்றை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து நன்கு வெந்து கொண்டிருக்கும் குடலில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். குடல் நன்கு வெந்ததும் ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வதக்கி எடுத்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு சட்டியில் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான ஆட்டுக்குடல் குழம்பு ரெடி.