சுவையான ப்ரெட் மஷ்ரூம் செய்வது எப்படி ?

Default Image
  • சுவையான ப்ரெட் மஷ்ரூம் செய்வது எப்படி ?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான, புதிய புதிய உணவு வகைகளை செய்து வருகிறோம். இந்த உணவுகளை தான் இப்பொது உள்ள தலைமுறைகளும், இனி வரும் தலைமுறைகளும் விரும்பி உண்கிறோம். தற்போது, சுவையான ப்ரெட் மஷ்ரூம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • சிவப்பு கிட்னி பீன்ஸ் – 200 கி. ( இரவே ஊற வைத்திருக்க வேண்டும்)
  • வெண்ணெய் – 70 கி.
  • பட்டன் மஷ்ரூம் – 750 கி. (கால்வாசியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 100 கி. (நறுக்கியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • ஓம இலைகள் – 1 கொத்து
  • வெள்ளை ஒயின் – 150 மி.லி.
  • டபுள் கிரீம் – 6 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள் -2 தேக்கரண்டி
  • பிரெட் துண்டுகள் – 8

செய்முறை

பீன்ஸ்களை உப்பிட்ட தண்ணீரில் நன்றாக வேக வைக்க வேண்டும். நீரை வடிகட்டி அந்த பீன்ஸை தனியாக வைக்க வேண்டும். பெரிய பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்க வேண்டும். மஷ்ரூம்களை சேர்த்து சூடேற்றி பிரவுன் நிறமாகும் வரை ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

Image result for ப்ரெட் மஷ்ரூம்

நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ், உப்பு, மிளகு மற்றும் ஓம இலைகளை சேர்த்து, நன்றாக கலக்கும் வரை கரண்டியால் கலக்கி விட வேண்டும்.

அதன்பின் பாத்திரத்தை இறக்கி, அதனுடன் வெள்ளை ஒயினை சேர்க்க வேண்டும். மீண்டும் அடுப்பில் வைத்து, அடிபிடிக்காமல் இருக்க ஓரங்களிலும், அடிப்பகுதியிலும் கிளற வேண்டும். டபுள் கிரீமை சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். கொத்தமல்லி சேர்த்து, சூட்டிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். பிரெட்டில் வைத்து சூடாக பரிமாற வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்