ருசியான கத்தரிக்காய் தொக்கு செய்முறை.!
கத்தரிக்காய் தொக்கு அனைவருக்கும் பிடிக்கும்னு தெறியும்,. அதனை செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 6
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் மூனறையும் நீளமாக நறுக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். சிறிது நேரம் கழித்து, கத்தரிக்காயை குக்கரில் வேக வைக்கவும். இரண்டு அல்லது மூன்று விசில்களுக்குப் பிறகு எடுக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், மஞ்சள் தூள், மற்றும் 6-8 மிளகாய் தூள் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அனைத்து பொருட்களையும் வதக்கவும்.
இப்போது, கறிவேப்பிலை சேர்க்கவும், பின்னர் வேகவைத்த கத்தரிக்காயை சேர்க்கவும். கலவையில் 50 கிராம் புளி விழுது கலக்கவும். மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்னர், சுவைக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது சுவையான கத்தரிக்காய் தொக்கு ரெடி…..