முட்டை என்றாலே பலருக்கும் பிடிக்கும். வீட்டில் ஏதேனும் குழம்பு வைக்காவிட்டால் முட்டை இருக்கிறதா என்றுதான் கண்கள் தேடும். அந்த அளவிற்கு பலருக்கும் முட்டை மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும். சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்கப்படக்கூடிய பரோட்டாவுக்கு கொடுக்கக்கூடிய சால்னா பலருக்கும் பிடிக்கும். இந்த சால்னாவை முட்டை வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லி, தக்காளி ஆகியவை சேர்த்து லேசாக உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னதாக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து லேசாக நீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளவும். பின் ஒரு சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மசாலாவையும் சேர்க்கவும்.
அதன்பின் 2 கப் நீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து விட்டு, வேக வைத்துள்ள முட்டைகளை லேசாக கீறிவிட்டு கொதிக்கும் குழம்பில் போட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான முட்டை சால்னா வீட்டிலேயே தயார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…