சுவையான காலிஃப்ளவர் பக்கோடா செய்வது எப்படி.!
சுவையான காலிஃப்ளவர் பக்கோடா மாலை நேர ஸ்நாக்ஸாக செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம் . தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது குறித்து தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.காலிஃப்ளவரில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- சோள மாவு – 1/4 கப்
- அரிசி மாவு – 1/4 கப்
- பெரிய வெங்காயம் – 1
- பூண்டு – 3
- முழு காலிஃப்ளவர் பூ – 1
- இஞ்சி – துண்டு
- பச்சை மிளகாய் – 1
- கேசரி பவுடர் – 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- கருவேப்பிலை – சிறிதளவு
- கடலை மாவு – 1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காலிஃப்ளவர், வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின் இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.அதன் பின் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்திருக்கும் கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்
தண்ணீர் சூடான பின்னர் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு மூடி போட்டு மூடி வேக வைக்கவும்.2 நிமிடத்திற்கு பிறகு வேக வைத்த காலிஃப்ளவரில் உள்ள தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு, சோள மாவு, ஒரு மேஜைக்கரண்டி கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, மற்றும் மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து வைக்கவும்.பின்னர் அதில் முன்பே நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் பேஸ்டாக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்த பின்னர் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை அதில் போட்டு நன்கு கலந்து விடவும்.
அடுத்ததாக மிதமான சூட்டில் அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாகிய பின்னர் அதில் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக போட்டு அது பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து பொரித்து எடுக்கவும்.
இப்போது மிகவும் சுவையான மொறு மொறுவான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.