சுவையான பேரிச்சை பழம் கேக் செய்வது எப்படி?
- சுவையான பேரிச்சை பழம் கேக் செய்வது எப்படி?
பேரீச்சம் பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. பேரீச்சம் பழம் அனைத்து வகையான இனிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த பதிவில், சுவையான பேரீச்சம் பழம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 100 கிராம்
- பிரவுன் சுகர் – 75 கிராம்
- மைதா – 75 கிராம்
- வெண்ணெய் – 30 கிராம்
- முட்டை – 1
- வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
- சமையல் சோடா – அரை தேக்கரண்டி
- சூடான தண்ணீர் – 125 மில்லி
செய்முறை
ஸாஸ் செய்யும் முறை
ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக விட வேண்டும். உருகியதும் பிரவுன் சுகர், கிரீம் போட்டு 10 நிமிடங்களுக்குச் சிறு தீயில் நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.
ஆறின கேக்கின் மேல் மரக்குச்சியால் சிறு சிறு துவாரங்கள் போட வேண்டும். அதன் மேலே செய்து வைத்த ஸாஸில் பாதி ஊற்ற வேண்டும். மீதி ஸாஸ் தேவைப்படும்போது சூடு பண்ணி உபயோகப்படுத்தலாம்.
கேக் செய்யும் முறை
பேரீச்சைப்பழம் கேக் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழம், சமையல் சோடா போட்டு அதில் சூடான வெந்நீர் ஊற்ற வேண்டும். கேக்கிற்கான கலவை தயார் பண்ணும்வரை ஓரமாக வைக்க வேண்டும். பின் வெண்ணெய், பிரவுன் சுகர் இரண்டையும் மிருதுவாகும்வரை அடிக்க வேண்டும்.
பின்பு முட்டையைச் சேர்த்து அடிக்க வேண்டும். அதன் பின் மாவைப் போட்டு மெதுவாகக் கலக்க வேண்டும். ஆனால், வேகமாக அடிக்கக் கூடாது. பின்பு ஊற வைத்த பேரீச்சம் கலவை, வெனிலா எசன்ஸ் இரண்டையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
பின் வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கலவையை ஊற்ற வேண்டும். கேக் செய்வதற்கு முன் ஓவனை 180 டிகிரி சூடு செய்ய வேண்டும். அப்படி ஏற்கனவே சூடு செய்த ஓவனில் கேக் கலவையை 45 நிமிடத்திற்கு வேகவிட வேண்டும். 45 நிமிடம் கழித்து வெந்துவிட்டதா என மரக்குச்சியால் குத்திப் பார்க்கவும். கேக் நன்கு வெந்த பிறகு, இந்தக் கேக்கை வெனிலா ஐஸ் கிரீமுடன் சுவைத்தால், மிகவும் அருமையாக இருக்கும்.