மாலை நேரத்தில் அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம்.அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.அதனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள்.அந்த வகையில் இன்று அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.
முதலில் ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீரை சேர்த்து விட்டு ,அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெயை சேர்க்க வேண்டும்.
அதன் பின் தண்ணீர் நன்றாக சூடாகிய பின்னர் அதில் 1 கப் அரிசி மாவை போட்டு நன்றாக கிளறி விடவும் .அப்போது மிதமான சூட்டில் அடுப்பு இருக்க வேண்டும் .அதன் பின் கிளறி விட்ட அரசி மாவை அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடி கொண்டு மூடி வைக்கவும்
சுமார் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அரசி மாவை ஒரு பவுலில் மாற்றி , இடியாப்பத்திற்கான மாவு பதத்தில் வரும் அளவிற்கு பிசைந்து வைக்கவும்.அதன் பின் அதனை மூடி வைத்து மூடி வைக்கவும்.
சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மாவை அழுத்தி பிசைய வேண்டும்.கையில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெயை தடவி பிசைய வேண்டும்.அதன் பின் மாவை சப்பாத்தி போன்று உருட்டி அதன் ஓரங்களை வெட்டி மூன்று பாகங்களாக பிரித்து சிறுது சிறிதாக முக்கோண வடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.
அதன் பின் சூடான எண்ணெயில் வெட்டி வைத்த மாவை போட்டு கொஞ்சம் நிறம் மாறியதும் பொரித்து எடுக்கவும்.பொரித்த சிப்ஸை தனி பாத்திரத்தில் மாற்றி அதில் 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்தால் மொறு மொறுவான சிப்ஸ் ரெடி .
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…