சுவையான முட்டைக்கோஸ் வடை வீட்டில் செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். ஆனால் அதையே நீங்கள் மொறுமொறுப்பான வடையாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டைக்கோஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 1.5 கப், முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பினை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அதிகமான தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது. வடைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அந்த மாவில் நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வடைக்கு ஏற்றாற்போல் பிசைந்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் வடை மாவை எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும். சுவையான மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் வடை ரெடி.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…